• Sun. Mar 16th, 2025

மூதாட்டியை முகநூல் மூலமாக குடும்பத்தினரிடம் சேர்க்க உதவிய மருத்துவர்

ByKalamegam Viswanathan

Feb 25, 2025

ஞாபகம் மறதியால் வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி ஒருவரை, மருத்துவர் ஒருவர் 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர் மற்றும் அரசு மருத்துவர் மூலமாக மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையம் எதிரே மூதாட்டி ஒருவர் ரத்த காயத்துடன் இருப்பதாக 108 அவசர கால ஊர்திக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரைந்த திருப்பரங்குன்றம் 108 அவசரகால ஊர்தி ஓட்டுநர் உதயகுமார் மருத்துவ உதவியாளர் கருப்புசாமி ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் அவர் பெயரைக் கேட்க முயன்றார். எனினும் அவரால் சொல்ல முடியவில்லை முதலுதவி அளித்து கொண்டே தங்கள் பெயரை சொல்லுங்கள் என 108 அவசர கால ஊர்தி மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் மற்றும் செவிலியர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக அவரை பெயர் கேட்பதற்கு முயன்றனர். அப்பொழுது மீரா என்று பெயரை மட்டும் சொல்லிவிட்டார். உடனடியாக மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது திருப்பரங்குன்றம் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாக்கியலட்சுமி இந்த பெண்மணியை முகநூலில் பார்த்ததாக ஞாபகம் வந்துள்ளது. அப்பொழுது முகநூலில் சர்ச் செய்த பொழுது இதே போன்ற மூதாட்டி நேற்று காலை வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளது தெரிய வந்தது. இவர் உறவினர்கள் காணாமல் போனதாக முகநூல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. உடனடியாக 108 அவசரகால ஊர்தி ஓட்டுநர் உதயக்குமாருக்கு தொலைபேசி வாயிலாக அந்த மூதாட்டியின் பெயர் என்ன மீண்டும் உறுதிப்படுத்த கேட்டுள்ளார். அப்பொழுது மீரா என்று சொல்லி உள்ளார். அப்பொழுது இவர் மதுரை திருமலை நாயக்கர் மஹால் பகுதியை சேர்ந்த மீரா என்பதும் வயது 77 என்பதும் இவர் சற்று ஞாபகம் மறதியுடன் இருப்பதாக முகநூலில் பதிவிட்டு இருந்தது. உடனடியாக அதில்p கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மூதாட்டியை பார்த்து அவர்தான் என உறுதி செய்யப்பட்டது. முகநூல் மூலமாக காணாமல் போன மூதாட்டியைக் கண்டுபிடிக்க உதவிய அரசு மருத்துவர் பாக்கியலட்சுமிக்கும் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உதயகுமார் மற்றும் கருப்புசாமி ஆகியோருக்கு குடும்பத்தினர் நன்றியினை தெரிவித்தனர்.