• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்தி

ByA.Tamilselvan

May 28, 2023

மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றம் நோக்கிய பேரணி சென்ற வீராங்கனைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த நிலையில், மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில், வீரர் வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படும் வீடியோவையும் பதிவிட்டு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கூறுகையில், “முடி சூடும் விழா முடிந்தததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது” கூறியுள்ளார்.