• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கோட்டைமேடு அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்..,

ByB. Sakthivel

Apr 4, 2025

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோட்டைமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கடந்த வாரம் மகா கணபதி ஹோமம் , மனச அபிஷேகம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது.

தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து நான்கு கால யாகசாலை பூஜைகளும் நிறைவடைந்து மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் ஓத கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீரானது ஆலயத்தின் விமானம் மற்றும் ராஜகோபுரம் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மனை தரிசித்து சென்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.