புதுக்கோட்டை அருகே உள்ள மிக பிரசித்தி பெற்ற என் கீழப்பழுவஞ்சி ஸ்ரீ பெரியஅய்யனார் ஆலய நுழைவு வாயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே உள்ள கீழப்பழுவஞ்சி என்ற கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் பழமையான ஆலயமாகவும் ஸ்ரீ பெரிய அய்யனார் ஆலயம் திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் இந்த ஊர் கிராம மக்கள் சேர்ந்து நுழைவு வாயில் வடிவமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளுடன் இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காசி ராமேஸ்வரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை வானத்தில் வட்டமிட்ட கருடன் ஆசியுடன் புனித நீரை கும்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.