• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆவண படம் வெளியிட்ட காங்கிரஸ்கட்சியினர்… எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது

இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற ஆவணப் படத்தினை ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் சங்கர் தலைமையில். பெரிய எல்சிடி திரையில் நேற்று மாலை வெளியிட காத்திருந்தனர். இதை அறிந்த அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையில் . மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி உட்பட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக வந்தனர். திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலை கும்பகோணம் விருத்தாச்சலம் நெடுஞ்சாலை எனும் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தியதால். போலீசாருக்கும் பாஜகவினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு நிலவிய நிலையில் போலீசார் பாஜ கவினர் குண்டு கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.


காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஆவணப்பட வெளியிடும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ கண்ணன். மதிமுக சார்பில் புகழேந்தி. திமுக சார்பில் நகர செயலாளர் கருணாநிதி. விசிகா சார்பில் இலக்கிய தாசன் உட்பட மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆவண படத்தை திரையிட்டு பார்த்தனர்.