• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களுக்கு ஆணையாளர் பாராட்டு

ByKalamegam Viswanathan

Feb 14, 2024

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் அப்துல் ரகுமான் த/பெ.நாசர் S.S. காலனி, 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் வினித் த/பெ.ஜெகதீசன் S.S காலனி ஆகிய இருவரும் மாலை பள்ளி முடித்து வீடு திரும்புகையில் S.S காபி பார் அருகில் ரூபாய். 13,400 சாலையில் கிடந்ததை பார்த்து அப்பணத்தை எடுத்து S.S காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணமானது காவல் விசாரணைக்கு பிறகு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிறந்த செயலை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் மதுரை மாநகர காவல் ஆணையர் மாணவர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழும் பரிசு தொகையும் வழங்கி பாராட்டினார்.