

மதுரை மாநகர் ஓபுளா படித்துறை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் திறந்து வைக்கப்பட்டது.
குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாகவும்,போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாகவும் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புறக்காவல் நிலையத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் விதமாக 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு),சரக உதவி ஆணையர், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். புறக்காவல் நிலையத்தின் பணிகள், பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.


