• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கார் விபத்தை ஏற்படுத்திய காமெடி நடிகர்! போலீசார் வலைவீச்சு!

நேற்று முன் தினம் இரவு, பட்டினப்பாக்கத்தில் காமெடி நடிகர் கணேஷ் அதிவேகமாக காரை ஓட்டியுள்ளார்! அப்போது கார் சாலை தடுப்பில் மோதியது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த இளைஞர் கார் மோதி காயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு காணாமல் போன காமெடி நடிகர் கணேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என சினிமா, சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆர்த்தி. இவரது கணவர் கணேஷ். சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

விபத்து அன்று கணேஷ் காயம்பட்டு தேனாம்பேட்டை அப்போலோ சென்றதாக தெரியவந்துள்ள நிலையில் அங்கு சென்றபோது அங்கு அவர் அனுமதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது கணேஷ்-ஐ போலீசார் தேடி வருகின்றனர்.