மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் தேவை குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு.,

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பின் பயனுள்ள மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.,

சேடபட்டியில் உள்ள அரசு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,

இந்நிகழ்வில் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சேடபட்டி வட்டார மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உபகரணங்களை வழங்கினர்.,
