• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

துணை மின் நிலையத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்..,

ByPrabhu Sekar

Feb 26, 2026

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட 55 மற்றும் 56வது வார்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த துணை மின் நிலையம் இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது.

பழைய பெருங்களத்தூர் பகுதியில், மண்டல அலுவலகம் எதிரே உள்ள சுமார் 50 சென்ட் நிலத்தில் இந்த துணை மின் நிலையம் அமைக்க முன்பே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது பேரூராட்சி துணைத் தலைவராக P. புகழேந்தி பதவி வகித்தார்.

ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறைக்கு வராமல் நிலுவையில் இருந்தது. பின்னர் திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் சட்டமன்றத்தில் இந்த திட்டம் குறித்து வலியுறுத்தி பேசியதன் மூலம், திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இன்று பிப்ரவரி 26, 2026 அன்று மதியம் 12 மணியளவில், தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலமாக புதிய துணை மின் நிலையத்தை துவக்கி வைத்தார்.

பெருங்களத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் தலைமையேற்று ரிப்பன் வெட்டி திட்டத்தை துவக்கி வைத்து, முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து உரையாற்றினார். இந்த துணை மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், 55 மற்றும் 56வது வார்டு பகுதிகளில் மின் அழுத்த குறைபாடு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சினைகள் குறைந்து, மின்விநியோகம் மேம்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மண்டலம் 4 தலைவர் டி. காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் P. புகழேந்தி,M.C அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.