தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி க்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உயர் கல்வித் துறையின் சார்பில் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்களை நேற்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து,ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இக்காணொளிக்காட்சி விழாவின் நேரலை ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி கட்டடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிறப்புரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன்,திமுக சட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா . சந்திரசேகர் , ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் சுமதி , தஞ்சாவூர் மண்டல கல்விக் கல்லூரி இணை இயக்குநர் குணசேகரன், ஜெயங் கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ)முனைவர்.ம. இராசமூர்த்தி, ஒன்றிய திமுக செயலாளர்கள் தனசேகர், ரெங்க முருகன், மணிமாறன், கணேசன் , ஆர்.கலியபெருமாள் ,ஜெயங் கொண்டம் நகர்மன்ற துணைத் தலைவர் கருணாநிதி,பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் கார்த்தி கேயன், பாலமுருகன், உதவி பொறியாளர்கள்சதிஷ்குமார், கலைமதி,ஹென்றிசாம்
செல்வின், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
