• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு தமிழ்நாட்டில் நீட்டை திணித்தது – அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு.

ByVasanth Siddharthan

Apr 19, 2025

நீட் தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்தும் பொழுது, தமிழகத்தில் நீட் சட்டம் கொண்டு வருவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டில் நீட்டை திணித்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசி உள்ளார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது அதிமுக தான் என அண்டப் புழுகு, ஆகாச புழுகு செய்கின்ற திமுகவினர். சரியாக ஒரு வருடம் 3 மாதத்தில் திமுக இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போய்விடும்.

ஸ்டாலின் பேச்சில் தடுமாற்றம் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் ஆகியோரை கொச்சையாக பேசுகிறார். கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பித்து பிடித்தது போல் உளறிக்கொண்டு இருக்கிறார்.

நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி, ஆட்சிக்கு வந்த விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசினால் தங்கள் இன்னுயிரை இழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

பின்னர் இறந்து போன 22 மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பின் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறும்போது,

  • நீட் தேர்வு குறித்து திமுக நாடகம் மாடி வருகிறது. மத்தியில் காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது திமுக இணை அமைச்சராக இருந்த காந்தி செல்வம் இதில் கையெழுத்திட்டு உள்ளார்.
  • திமுக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து அவர்களே போராட்டத்தில் ஈடுபடுவது என்பது மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு உதாரணம்.
  • தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.
  • கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது மத்திய காங்கிரஸ் இந்திரா காந்தி மற்றும் தமிழ்நாட்டில் கருணாநிதி ஆகியோர் ஆட்சியில் இருக்கும் பொழுது நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது கச்சத்தீவை மீட்டு எடுப்போம் என சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வருகின்றனர்.
  • தற்போது கச்சத்தீவை மீட்டெடுப்போம் என புதிய நாடகம் மாடி வருகின்றனர்.
  • திமுக செய்த வேலைகளை அவர்களே எதிர்க்கிறார்கள். மக்களிடம் வேஷம் போடுகின்றன. எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது.
  • நீட் தேர்வை கொண்டு வந்தது அதிமுக தான் என அண்டப் புழுகு, ஆகாச புழுகு செய்கின்ற திமுகவினர்.
  • நீட் தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்தும் பொழுது, தமிழகத்தில் நீட் சட்டம் கொண்டு வருவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டில் நீட்டை திணித்தது.
  • திமுக நினைத்திருந்தால் அன்று நீட் சட்டம் கொண்டு வராமல் தடுத்திருக்கலாம்.
  • மக்களின் மறதி தான் திமுகவின் மூலதனம்.
  • சரியாக ஒரு வருடம் 3 மாதத்தில் திமுக இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போய்விடும்.
  • அடுத்தது அதிமுக ஆட்சிக்கு வரும் என மூத்த அமைச்சர்களில் இருந்து அனைவருக்கும் தெரிந்துள்ளது.
  • ஸ்டாலின் பேச்சில் தடுமாற்றம் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர் ஆகியோரை கொச்சையாக பேசுகிறார். கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பித்து பிடித்தது போல் உளறிக்கொண்டு இருக்கிறார்.” என தெரிவித்தார்