• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடபடங்களை வெளியிட்டது

ByA.Tamilselvan

Jan 20, 2023

விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. ராஜபாதை சீரமைப்பு மற்றும் துணை ஜனாதிபதி இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் ஆகிய புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய பாராளுமன்றம் கட்டப்படுகிறது.

இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து விடும். மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, புதிய கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.