எடப்பாடி மீது வழக்கு தொடுத்திருப்பது காவல்துறையினுடைய நடவடிக்கையை தவிர வேறொன்றுமில்லை, தமிழக முதல்வர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் – ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் , தமிழக அரசின் திட்டப்பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,
தமிழக அரசு உத்தரவின் படியும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த உத்தரவின் பேரிலும், ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில் , இங்குள்ள அரசின் திட்ட பணிகளை அதிகாரிகளுக்கு விரைந்து முடிக்க ஆய்வு மேற்கொண்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடுத்தது காவல்துறையே , தமிழக முதல்வர் பாரபட்சமின்றி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் எனவும் பேட்டி அளித்தார்.
இதனை தொடர்ந்து வன்னி வேலம்பட்டி கிராமத்தில் 23.65 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்து, அருகில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பெண்கள் நியாய விலை கடையில் அரிசி தரமற்றதாக உள்ளதாக புகார் அளித்தனர் .அதன் பெயரில் நியாய விலை கடைக்கு சென்று அரிசி சோதனை செய்த அமைச்சர் / தரமானதாக உள்ளதாக அதே பெண்ணிடம் தெரிவித்தார். மேலும் தரமற்றதாக இருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களிடம் தெரிவித்தார்…