• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு

Byவிஷா

Apr 17, 2024

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.00 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நாள் வரை தேர்தல் விதிகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் ஊடகங்கள், பேஸ்புக், வாட்ஸ் அப், எக்ஸ் வலைத்தளம் போன்ற சமூக வலைத்தளங்கள் என எந்த வகையிலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது. மாலை 6:00 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும், ஹோட்டல்கள் விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்பதை ஹோட்டல் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது. இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் திரையரங்குகள் மூலம் பரப்புரை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.