திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரை ரூ. 42 கோடியில் அமைத்த புதிய தார்ச் சாலை ஐந்தே மாதங்களில் சேதமடைந்துவிட்டது. திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டையொட்டி தென்கால் கண்மாய் கரையோரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 3 கி.மீ.,-க்கு புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டது.

ஒரு பக்கம் கரையின் உட்புறம் 3 கி.மீ., உயர தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. மெயின் ரோடு 7.5 மீ., அகலமும், இடது புறம் நடைமேடையும் அமைக்கப்பட்டது.
மறுபுறம் செடிகள் வளர இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோட்டின் ஓரம் 79 மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜன. 1-ல் இந்த புதிய சாலையை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார். திறந்த சில நாட்களிலேயே பாலங்கள் ஆங்காங்கு சேதம் அடைந்துள்ளது அதை பேட்ச் ஒர்க் பார்த்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய பரிசோதனை செய்யாமல் மீண்டும் இதே போன்று தற்போது மூலக்கரை அருகே பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. மேலும் பல இடங்களில் சேதம் அடைந்து வருகிறது.

இதனால் இரவு நேரம் பலர் விழுந்து காயமடைகின்றனர். இந்தச் சாலை அமைக்கும் போதே பல இடங்களில் சேதமடைந்திருந்தது. திறப்பு விழாவுக்கு முன்பே சில இடங்களில் தார் பெயர்ந்து காணப்பட்டது. தரமற்ற பணியால்தான் சாலை உடனுக்குடன் சேதமடைவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்காலத்தின் தன்மையை உறுதி செய்து பிறகு வாகனத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் இது தொடர்ந்து பாலத்தில் பள்ளங்கள் விழுவதால் பாலத்தில் பயணிப்போம் பயத்திலேயே பயணம் செய்ய வேண்டி உள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் உடனடியாக. இதனைச் சீரமைக்க வேண்டியது அவசியம்.




