சேலம் மாநகராட்சியில் பேருந்து படிக்கட்டில் நின்றிருந்த நடத்துனர் தவறி விழுந்து பலியான சிசிடிவிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இன்று சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் சிட்டிசாவடிக்கு பேருந்து செல்லும் போது குறுக்கே நாய் வந்த காரணத்தினால் ஓட்டுநர் திடீரென்று பிரேக் போட்டுள்ளார். இதில் படிக்கட்டில் நின்றிருந்த நடத்துனர் நிலைத்திடுமாறி கீழே விழுந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.