• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதலையை விரட்டிய வீர பெண்…

Byகாயத்ரி

Nov 15, 2021

தனது செருப்பை காட்டி பெண் ஒருவர் முதலையை விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அன்றைய காலகட்டத்தில் தமிழ் பெண்கள் முறத்தை வைத்து புலியை விரட்டினார்கள் என்று பல கதைகளில் சொல்லிக் கேட்டிருப்போம். காரணம் அந்த அளவுக்கு தமிழக பெண்கள் வீர, தீரத்துடன் இருந்தார்கள் என்பதற்கு அப்படி சொல்லப்படுவதுண்டு.


அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் தனது செருப்பை காட்டி முதலையை விரட்டியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆஸ்திரேலியாவின் காகாடு தேசிய வனப் பூங்காவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. நீர்நிலையின் கரையில் இந்த பெண் நிற்கிறார். அப்போது முதலை ஒன்று தண்ணீல் அவரை நோக்கி வருகிறது.


அப்போது அந்த பெண் தனது செருப்பை கழட்டி ஒலி எழுப்பியதும் அந்த முதலை அங்கிருந்து ஓடி விடுகிறது. இந்த வீடியோ பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.