• Fri. Apr 26th, 2024

கன்னியாகுமரியில் முதல்வர் மழை பாதித்த பகுதிகள் ஆய்வு..

Byகாயத்ரி

Nov 15, 2021

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்கிறது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


குமரி மாவட்டத்தில் தற்போது நிலைமையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோ தங்கராஜ் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.இதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய கன்னியாகுமரி செல்கிறேன். திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டு போடாத மக்களுக்கும் சேவை செய்வதே எனது கொள்கை. மழை வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பற்றி கவலைப்படுவதில்லை. மழைக்காலம் முடிந்த பின், எதிர்க்கட்சி செய்த அக்கிரமத்தை தனி ஆணையம் அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *