• Mon. Mar 24th, 2025

குளத்தில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

ByArul Krishnan

Feb 22, 2025

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சுதர்சன். இவர் அருகில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் தனது தாத்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தாத்தாவுடன் கிராமத்தை ஒட்டியுள்ள கோயிலின் அருகில் உள்ள குளத்தின் அருகே சென்றுள்ளனர். அப்பொழுது சிறுவன் சுதர்சன் குளத்தில் தவறி விழுந்து மூழ்கியுள்ளான். இதனைப் பார்த்து தாத்தா கூச்சலிடேவே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சுதர்சனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.