
பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள திருப்பெயர் தனியார் பள்ளி மைதானத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அப்பா என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெழுத்து இட்டால் பழங்குடியின மக்கள் மற்றும் பட்டியில் இன மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பட்டியல் இட்டார். 10000 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் கையெழுத்து இடப்போவதிலை என பேசினார். இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர்கல்வி தேனை அமைச்சர் பொன்முடி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
