• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டோல்கேட் வயல்வெளி அருகே வாலிபரின் பிணம்..,

ByKalamegam Viswanathan

Aug 8, 2025

மதுரை சிந்தாமணி ரிங் ரோடு டோல்கேட் அருகே வயல்வெளியில் வாலிபர் ஒருவர் பிணமாக இருப்பது குறித்து சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து சிலைமான் போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் தீவிர சோதனையில் இறந்த வாலிபரின் உடலில் எந்தவித இரத்த காயமும் இல்லை. அருகில் ஒரு பீர் பாட்டில் கிடந்தது . விஷம் குடித்து இறந்தாரா அல்லது வேறு யாரும் வந்து கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்த வாலிபர் நீல நிற டீ ஷர்ட்டும் காக்கி பேண்டும் அணிந்திருந்தார். பார்க்க வட இந்தியர் போல் தோற்றம் அளிப்பதால் அருகில் வேலை செய்யும் வட இந்திய வாலிபர்களிடம் இறந்த வாலிபரின் புகைப்படத்தை காட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.