• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனித்து நிற்பது குறித்து பாஜக மாநில தலைமை முடிவு செய்யும்

Byகுமார்

Nov 13, 2021

தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய திறன் பாஜகவுக்கு உள்ளது என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க பாஜக தயாராக உள்ளது எனவும் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் சரவணன் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில்,
“பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக நிறைவேற்றவில்லை.மேயர் தேர்தல் நேரடியாக நடைபெற்றால் மதுரை மாநகராட்சியை பாஜகவிற்கு ஒதுக்க அழுத்தம் கொடுப்போம்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க முடியும். தனித்து நின்றாலும் வெல்ல கூடிய திறன் பாஜகவிற்கு உள்ளது.தனித்து நிற்க பாஜக தயாராக உள்ளது.இந்த தேர்தலில் எங்கள் வாக்கு வங்கி பலத்தை காண்பிப்போம்.அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது.தனித்து நிற்பது குறித்து மாநில தலைமை முடிவு செய்யும்” என்றார்.