• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி…

ByK Kaliraj

Dec 29, 2025

திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி தமிழகம் தலைகுனியாது என் சாவடி வெற்றி சாவடி என்ற தலைப்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆலோசனைபடியும், விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் மடத்துப்பட்டி, உப்புபட்டி, ரெட்டியாபட்டி, கிராமங்களில் உள்ள வாக்குசாவடியில் பரப்புரை கூட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய பொருளாளர் விவேகனந்தன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், ஒன்றிய அணி பூத் கமிட்டி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன் பேசியது,

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறார். அதனை வீடு வீடாக மக்களிடம் கொண்டு சென்று சாதனைகளை விளக்கிக் கூற வேண்டும். சென்ற தேர்தலை காட்டிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு பூத்துகளிலும் கூடுதலாக பாக்களை பெற்று மாபெரும் வெற்றியை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இப்போது முதல் தேர்தல் பணியை தீவிர படுத்த வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலுன்ற அனுமதிக்க கூடாது. என பேசினார்.