• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோத்தகிரி வங்கி ஏடிஎம் உடைத்த நபர் கைது!

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் கடந்த 3ஆம் தேதி அன்று சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக காவல்துறையினருக்கு வங்கி அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணையை தொடங்கினர். இதில் கட்டபெட்டு பகுதியில் சந்தேகத்தின் பெயரில் மடித்தொரை அருகே போரர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் 32 என்பவரை விசாரித்தனர்.

விசாரணையில் பிரகாஷ், ‘கடந்த 3ம் தேதி இரவில் குடும்ப சூழ்நிலை காரணமாக வறுமையில் இருப்பதால் வங்கி ஏடிஎம் திறந்தால் காசு வரும் என்று எண்ணி அதை உடைக்க முற்பட்டேன். ஆனால் முடியாமல் திரும்பி சென்று விட்டேன். வறுமையில் உள்ளதாக காசை திருடி விட்டால் தன் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று நினைத்தேன்’ என்று கூறியுள்ளார். பின்பு காவல்துறையினர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.