• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாலா-சூர்யா கூட்டணி பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடக்கம்

நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து விஷால் ஆர்யாவை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தைத் தயாரித்து நடிக்கிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளின் போது வெளியிடப்பட்டது. சூர்யா நடிப்பில் பாண்டி ராஜ் இயக்கியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பிப்ரவரி 4 அன்று வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது பாலா, சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு அதே பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் படத்துக்காக சூர்யா 60 நாட்கள் கால்சீட் ஒதுக்கியுள்ளார் சூர்யா என்கின்றனர்.