
விளவங்கோடு தாலுகா, நல்லூர் வருவாய் கிராமத்திற்க்குட்பட்ட சேரிவிளை, மலவிளை காரவிளை பகுதியில் தலித்மக்கள் 175 வருடமாக பயன்படுத்தி வந்த இடுகாட்டை இரவோடு இரவாக ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமித்து தலித்மக்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும், புகார் கொடுத்து ஒரு மாதம் கடந்தும் இதுவரையில் எந்தவித முதற்கட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்தும் தலித் மக்களுக்கு நீதி கேட்டும் இன்று 20-7-2023 பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீர்வு கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி நடத்திய தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர்.வை.தினகரன் அவர்கள் தலைமையில் 73 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
