• Mon. Apr 29th, 2024

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி.., இந்தியா கூட்டணி இல்லை அது இத்தாலி கூட்டணி… சிவகாசி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்..,

காங்கிரஸ் தலைமையில் அமைத்துள்ள கூட்டணி இந்தியா கூட்டணி இல்லை, அது இத்தாலி கூட்டணி என்று சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
புரட்சித் தமிழர், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது.
மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சரவணகுமார், சாம் (எ) அபினேஷ்வரன், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ், கழக பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் முத்துராஜ முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சகுந்தலா ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் முருகவேல், ஒன்றிய கழக இணைச்செயலாளர் பாண்டியம்மாள்இளநீர்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய பொருளாளர் அமுதாகருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் துண்டுராசு, பெருமாள், பழக்கடைசெல்வம், ஒன்றிய மாணவர் அணி செயலாளர்கள் வசந்தகுமார், எம்ஜிஆர் மன்றம் ரங்கசாமி, இளைஞர் பாசறை அருண்குமார், பெரியார் நகர் கிளைச் செயலாளர் பாண்டி, அம்மா பேரவை வைரம், பழையூர் கிளைச் செயலாளர் சந்தீப், நடுவூர் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய மீனவர் அணி செயலாளர் ஆதியப்பன், கவிதாநகர் கிளைச் செயலாளர் ராமமூர்த்தி, பாறைப்பட்டி கிளைச் செயலாளர் கணேசன், ஐயப்பன் காலனி கிளைச் செயலாளர் பிச்சைமணி சிவகாமிபுரம் கிளை செயலாளர் முத்துப்பாண்டி முனீஸ்வரன் கிளைச் செயலாளர் பவுன்ராஜ் முனீஸ்வரன் காலனி கிளை செயலாளர் ஏசுநாதன் இளைஞர் அணி ஒன்றிய இணைச் செயலாளர் முனிஸ்வரன் பத்திரகாளியம்மன் காலனி கிளைச்சாளர் சசிகுமார் விநாயகர் காலனி கிளைச் செயலாளர் மகேஷ் காமராஜர் காலனி கிளைச் செயலாளர் மதன்குமார் ஓ.பி.ஆர் நகர் கிளைச் செயலாளர் பாலமுருகன முருகையாபுரம் கிளை செயலாளர் வீரபாண்டி, கணேசன் காலனி கிளைச் செயலாளர் தனுஷ்கோடி, தேவாங்கர் நகர் கிளைச் செயலாளர் செந்தாமரைக்கண்ணன் இந்திரா நகர் கிளைச் செயலாளர் ஞானசேகரன் பூச்சன்காலனி ரமேஷ் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நடுவூர் ராஜா ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் வைரமுத்து, முருகன் காலனி கிளைச் செயலாளர் முருகப்பூபதி, முருகன் காலனி மேற்கு கிளைச் செயலாளர் பெரியசாமி, பெருமாள்நகர் கிளைச் செயலாளர் காளிராஜன், விஜயலட்சுமிகாலனி கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன, ஒன்றிய விவசாய அணி செயலாளர் பாலகுருசாமி, அம்மா பேரவை முத்து வரவேற்புரை ஆற்றினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் காவேரி, தீக்கணல் லட்சுமணன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட கழக துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பலராம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ்.என்.பாபுராஜ் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
இன்று 52ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது அண்ணா திமுக. 20 வயதுள்ள ஒரு மணிதன் பக்குவப்படாத மனிதனாக பிரச்சனைகளை சந்திக்க முடியாதவராக இருந்து விடுவார். 70 வயது ஆகிவிட்டால் செயல்படமுடியாத நிலைக்கு சென்று விடுவார். 50 வயது என்பது ஒரு பக்குவப்பட்ட வயது அனைவரையும் புரிந்து கொள்ளும் வயது. இன்றைக்கு அண்ணா திமுகவிற்கு 52 வயது, திமுகவிற்கு 72 வயதாகிவிட்ட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 100 வயதாகிவிட்டது. திமுக, காங்கிரஸ் எல்லாம் ரிட்டேர்மண்ட வாங்கி வி்ட்டனர். தற்போது சும்மா அவர்கள் ஓடிக்கொண்டு உள்ளனர். அண்ணா திமுக கட்சிதான் நெஞ்சை நிமிர்த்தி இன்றைக்கு ஆளும் கட்சியாக இல்லை என்று சொன்னாலும் அதிமுக கொடி பிடித்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அண்ணா திமுக கொடி பறக்காத கிராமம் இல்லை. அண்ணா திமுக தொண்டன் இல்லாத ஊர் இல்லை. 2 கோடி தொண்டர்கள் நிரம்பிய கட்சி அண்ணா திமுக. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மறைந்தலும் இன்றும் அவரது திட்டங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருகின்றது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலம் பொற்கால ஆட்சியாக இருந்தது. புரட்சித்தலைவர் இருக்கும் வரை திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. புரட்சித்தலைவர் மறைவிற்கு பின்பு அண்ணா திமுக அழிந்து விடும், ஒழிந்து விடும் என்று அண்ணா திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என்று திமுகவினர் கொக்களித்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அண்ணா திமுகவிற்கு தலைமை தாங்கினார். முடக்கப்பட்ட இரட்டை இலை மீட்டெடுத்தார். புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஆட்சியை அண்ணா திமுக ஆட்சியை மீண்டும் அமைப்பேன் என்று சபதம் எடுத்தார். அண்ணா திமுகவை அரியணையில் அமர்த்தி காட்டினார். ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகின்ற பெருமையை எடுத்துக் கொடுத்தார்.
2011ல் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2016லும் ஆட்சிக்கு வந்து சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி மாபெரும் இயக்கமாக இந்த இயக்கத்தை கொண்டு சென்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்தில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி, தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் மிக்சி, ஃபேன், கிரைண்டர், மின்விசிறி விலையில்லாமல் வழங்கியவர் புரட்சிதலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி மறைவிற்கு பின்பு அண்ணா திமுக ஆட்சி கலைந்து விடும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிதைந்து விடுவார்கள் என்றெல்லாம் திமுக தலைவர்கள் பேசினார்கள். எடப்பாடியார் அண்ணா திமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஆட்சி கட்டில் அமர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் நல்லாட்சி கொடுத்தார். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அற்புதமான திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்.
அண்ணா திமுக ஆட்சியில் புரட்சித்தலைவி அம்மாவுடைய ஆட்சியில், எடப்பாடியார் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் திமுக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சியில் புதிதாக ஏதாவது திட்டத்தை தொடங்கி திறந்து வைத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் இதுவரை கிடையாது.
சிவகாசி சட்ட மன்ற தொகுதியில் இநத விஸ்வநத்தம் கிராமம் இரட்டை இலையின் எக்கு கோட்டையாகும். நான் எம்எல்ஏ தேர்தலில் நின்ற போது இந்த பகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை அள்ளி கொடுத்தனர். புரட்சித்தலைவர் மீதும், புரட்சி தலைவி மீதும் அதிக பாசம் கொண்ட கிராமம் இந்த கிராமம். சிவகாசி தொகுதியில் ஒரு அற்புதமான மக்கள் வாழக்கூடிய பகுதியாக இந்த பகுதி உள்ளது. அனைத்து சமுதாய மக்கள் வாழும் பகுதியான இங்கு எப்போது தேர்தல் வந்தாலும் இரட்டை இலை சின்னத்திற்கு அள்ளிக்கொடுக்கும் மக்கள் இந்த பகுதி மக்கள்.

பட்டாசு விபத்துக்கள் நடந்த போது நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் கூறி எல்லா பட்டாசு ஆலைக்கு செல்லும் சாலைகளும் புதிதாக போடப்பட்டன. என்னுடைய மூயற்சியால் அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் செல்லும் சாலைகளும் புதிதாக போடப்பட்டன. புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்தில் என்னுடைய முயற்சியால் பட்டாசு பயிற்சி மையம் சிவகாசியில் அமைந்தது. திமுக ஆட்சிக்கு வந்த உடனே அனைத்து வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை அதிபர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் பதிக்கப்படுகின்றனர். எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் 2ஆயிரம் அம்மா மினி கிளிக்கை எடப்பாடியார் திறந்து வைத்தார். இன்று அந்த 2ஆயிரம் மினி கிளிக்கை திமுக அரசு மூடி வி்ட்டது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய மினி கிளிக்கை மூடிய பெறுமை திமுக கட்சிக்கே சேரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுனார். முடியாததை முடியும் என்று கூறி படிக்கின்ற மாணவர்களை தடுக்கும் பணியைத்தான் திமுக செய்கின்றது. அரசு பள்ளி மாணவர்களை டாக்டர் ஆக்கிய பெருமை எடப்பாடியாரை சேரும். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அனுமதி பெற்று தொடங்கி வைத்தவர் எடப்பாடியார். அதிலே ஒன்றுதான் விருதுநகரில் உள்ள அரசு மெடிக்கல் கல்லூரி. மேலும் அதிமுக ஆட்சியில்தான் சிவகாசியில் ஒரு அரசு கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு அரசு கல்லூரி, சாத்தூரில் ஒரு அரசு கல்லூரி, அருப்புக்கோட்டையில் ஒரு அரசு கல்லூரி கொண்டு வரப்பட்டது. மாணவர் சமுதாயம் போற்றுகின்ற திட்டத்தை எடப்பாடியார் அவர்கள் கொண்டு வந்தார். விருதுநகர் மாவட்டத்திற்கு முதல் மெடிக்கல் கல்லூரியை வாங்கி கொடுத்த பெருமை எங்களைதான் சேரும.
அனைத்து மகளிர்க்கும் 1000 ரூபாய் கொடுப்போம் என்று திமுகவினர் கூறினார்கள். கொடுத்தார்களா இல்லை. ஏராளமான பெண்களை அலக்கழித்து அங்கே வா, இங்கே வா என்று அலக்கழித்து ரூபாயே வேண்டாம் என்று பெண்கள் சென்று விட்டனர். எம்பி தேர்தலுக்காக தற்போது 1000 ரூபாயை கொடுக்கின்றனர். 7 மாதத்திற்கு 7ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதிற்காக தற்போது கையெழுத்து இயக்கத்தை நடத்துகின்றனர். இதுவும் தேர்தலுக்காகதான். மக்களை ஏமாற்றுவதிற்காகதான் இன்றைக்கு திமுக ஆட்சியில் இருந்து மக்கள் விரோத ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றது. புரட்சித்தலைவர் காலத்தில், அம்மாவுடைய காலத்தில் எடப்பாடியார் காலங்களில் மக்கள் நலன் பெரும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தினோம். கொரோனா காலங்களில் பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்கியவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.
ஏழை எளிய மக்களை பற்றி சிந்திக்க கூடியவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்றது. காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி. அதற்கு பேர் இந்தியா கூட்டணியாம். கிடையவே கிடையாது காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ளது இத்தாலி கூட்டணி. எடப்பாடியார் தலைமையில் அமைய போகின்ற கூட்டணி தமிழ்நாடு கூட்டணி. எடப்பாடியார் தலைமையில் அமைய போகின்ற கூட்டணி தமிழ்நாட்டை வளமாக ஆக்க உண்மையாக போராடக்கூடிய உழைக்ககூடிய அத்தனை கட்சிகளும் இளைஞர்களும் ஒன்று திரண்டு அமையும் கூட்டணிதான். அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அமைய போகும் கூட்டணி. ஒரு ஜாதி வளையத்திற்குள் எடப்பாடியாரை மாற்றப்பார்த்தார்கள். அதை எல்லாம் தாண்டி நான் எல்லா ஜாதிக்கும் பொதுவானவன் என்று சொல்லி எல்லா பகுதிகளுக்கும் சென்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிடடது. திமுக ஆட்சியில் மக்கள் சந்தோசமாக இல்லை. எங்கு பார்த்தாலும் பிரச்சனை. சிவகாசியில் பட்டாசு தொழில்தான். 10லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நாடு முழுவதிலும் மறைமுகமாக 1கோடி பேர் வேலை பார்க்கின்றனர். இந்த பட்டாசு தொழிலை அழிக்கும் நோக்கில் எங்கையோ இருக்கும் ஒருவன் என்ஜிஓ என்று சொல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். கோடி கோடியாய் பணத்தை வாங்கி கொண்டு சைனா வெடியை இறக்குவதற்காக சிவகாசி வெடியை முடக்குவதற்காக மிகப்பெரிய சதி அண்ணா திமுக ஆட்சியில் பின்னப்பட்டது. அப்போது நான் அமைச்சர், அப்போது இங்குள்ள தொழில் அதிபர்களை அழைத்துக்கொண்டு 20 எம்பிகளை அழைத்துக்கொண்டு 3, 4 முறை டெல்லிக்கு சென்று சைனா பட்டாசு இந்தியாவிற்குகள் வருவதை தடுத்தோம். இது பட்டாசு ஆலை அதிபர்களுக்கு தெரியும். சைனா பட்டாசு இந்தியாவில் விற்பனை செய்ய இங்குள்ள சிலர் கூலியாகவும் இருப்பார்கள். அவர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். இது குறித்து புரட்சி தலைவி அம்மா அவர்களிடம் நான் எடுத்து சொன்னேன். அரசு சார்பாக வழக்கறிஞர் நியமித்து வாதாட வேண்டும் என்று சொன்னேன். உடனடியாக தலைமை செயலாளரை அழைத்து பேசி தனியாக வழக்கறிஞரை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடிதால் அன்று சைனா பட்டாசு தடுக்கப்பட்டது. இன்றுவரை இந்தியாவிற்குள் சைனா பட்டாசு விற்பனை செய்ய முடியாது.
புரட்சித் தலைவி அம்மா மறைவிற்கு பிறகு இந்த பட்டாசுதொழில் என்ன ஆகுமோ. என்று பட்டாசு ஆலை அதிபர்கள் கவலையடைந்துள்ளனர். இரவு 11 மணிக்கு பட்டாசு ஆலை அதிபர்களுடன் நான் எடப்பாடியாரை சந்தித்தேன். மீண்டும் தமிழக அரசு சார்பாக தனியாக வழக்கறிஞரை நியமித்து பட்டாசு தொழிலை பாதுகாத்தது அண்ணா திமுகதான். பட்டாசு தொழிலை பாதுகாத்த முதலமைச்சர் எடப்பாடியார். துணை நின்றவன் நான். இன்றைக்கு பட்டாசு தொழில் கேள்விக்குறியாக மாறிவிட்டது. கள்ளச்சாரயம் தொழில் போன்று ஓடி ஒளிய வேண்டிய நிலையில் பட்டாசு ஆலை அதிபர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலைகளில் எதற்கு தொடர்ந்து ரெய்டு பன்னுகின்றார்கள். உழைக்கும் பட்டாசு தொழிலாளர்கள் வாழும் பூமி இந்த பூமி. ரெங்கபாளையம் பட்டாசு கடை வெடி விபத்து பட்டாசு உற்பத்தியால் நடைபெறவில்லை. பட்டாசை வேடிக்கையாக வெடித்து பார்த்ததால் ஏற்பட்டது. அதை தடுகி்ன்ற பணியை அங்கு இருக்கின்ற நிர்வாகிகள் செய்திருக்க வேண்டும். வெடி விபத்தில் ஏராளமான பெண்கள் பலியாகினர். இந்த வெடி விபத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக ஒட்டு மொத்த பட்டாசு தொழிலை அழிக்க நினைத்தால் நாங்கள் விடவே மாட்டோம்.

எடப்பாடியார் ஒப்புதலோடு எனது தலைமையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க பட்டாசு தொழில் பாதுகாப்பு பேரவை என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, பட்டாசு தொழிலுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகின்றதோ அங்கெல்லாம் நாங்கள் நிற்போம். கீழ் மட்ட அதிகாரிகள் கடைகளை பூட்ட சொல்லி கட்டாய படுத்துகின்றனர். பூட்ஸ் காலோடு கடைக்குள் நுழைந்து மிரட்டுகின்றனர். பட்டாசு ஆலை அதிபர்களை கிரிமினல் போன்று அதிகாரிகள் பார்க்கின்றனர். கீழ் மட்டத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் அத்துமீறி வேலை பார்க்கின்றனர். இந்த ஆட்சியாளர்களின் மெத்தன போக்கில் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால் பட்டாசு ஆலை தொழிலை நடத்த முடியாத நிலையில் ஆலை அதிபர்கள் உள்ளனர். குன்னுார் சாலை விபத்தில் பஸ் கவிழ்ந்து 10பேர் உயிரிழந்தனர். அந்த சாலையில் பஸ் போக்குவரத்திற்கு தடை விதித்தார்களா. மீணடும் அந்த சாலையில் பஸ் ஓடவில்லையா. விபத்து நடந்தால் அந்த தொழிலை முடக்க நினைப்பது தவறு. விபத்து அனைத்து தொழில்களிலும் நடக்கின்றது. பட்டாசு விபத்து நடந்தால் அதை தடுக்கின்ற பணியை பாருங்கள். அதை விடுத்து 20நாட்கள் பட்டாசு ஆலையை பூட்டினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதை திமுக அரசுதான் பார்க்க வேண்டும். பட்டாசு தொழிலுக்கு தொடர்ந்து இது போன்ற பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டிரிந்தால் அதிமுக சா்பாக பட்டாசு பாதுகாப்பு பேரவை உருவாக்கி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று இந்த அரசிற்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாக சொல்கி்ன்றேன்.
அண்ணா திமுகவின் உண்மையான தொண்டராக விளங்கும் எடப்பாடியார் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் ஏற வேண்டும். அற்புதமான ஆட்சியை கொடுக்கக்கூடிய அருமையான பொதுச் செயலாளர் அவருடைய ஆட்சியில் விருதுநகர் மாவடடத்திற்கு கேட்டதெல்லாம் கொடுத்தார். சிவகாசி மாநகராட்சி, ராஜபாளையம் நகராட்சி, சாத்தூர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி, விருதுநகர் நகராட்சிக்கு 450 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். எனது முயற்சியால் எடப்பாடியார் அவர்கள் இந்த தி்டத்தை விருதுநகர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி வழங்கினார். விருதுநகர் பாதாள சாக்கடை திட்டத்தை அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம், ராஜபாயைத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். இப்படி அற்புதமான திட்டங்கள் கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில் தான். ராஜபாளையம் ரயில்வே பாலம், விருதுநகர் ரயில்வே மேம் பாலத்தை கொண்டு வந்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம், திருத்தங்கல் ரயில்வே மேம் பாலம், இருக்கன்குடி ரயில்வே மேம்பாலம் என மூன்று ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அரசாணை போட்டு பணம் ஒதுக்கி விட்டு தான் நாங்கள் ஆட்சியை விட்டு இறங்கினோம். இன்று வரை அந்தப் பணியை திமுக தொடங்கவில்லை.


சிவகாசி சுற்றுச்சாலை அண்ணா திமுக ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டு இடங்களை எல்லாம் எடுத்து விட்டோம். டெண்டர் விடும் நேரத்தில் தேர்தல் வந்துவிட்டது. தேர்தல் வந்த நேரத்தில் வேலைகள் அனைத்தும் நின்று விட்டன. இன்று வரை இந்த பணிக்கு நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கெல்லாம் அரசாணை என்னிடம் இப்பொழுது உள்ளது. சிவகாசி மாநகராட்சிக்கு அற்புதமான கட்டிடத்தை நாங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். அண்ணே காலனி. எம்ஜிஆர் காலனி. இந்திரா நகர் வசித்த பொதுமக்களுக்கு அண்ணா திமுக ஆட்சியில் தான் பட்டா வழங்கப்பட்டது. திமுக போன்று குடியிருப்பவர்களை விரட்டி அடிக்கவில்லை. குடியிருப்பவர்களுக்கு பட்டாவை வழங்கி வாழ்வாதாரத்தை நாங்கள் கொடுத்தோம். அண்ணா காலனி இடிக்க முற்பட்டபோது அவர்களுக்கு இரவோடு இரவாக பட்டாவை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியது அண்ணா திமுக அரசு. இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். இந்த தொகுதிக்கு செய்த வளர்ச்சி பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சிவகாசி தொகுதி அருமையான தொகுதியாக ஆக்கிய பெருமை எனக்கு உண்டு.
சிவகாசி தொகுதியில் மட்டும் 16 கால்நடை மருத்துவ கட்டிடங்களை கொண்டு வந்துள்ளேன். திருத்தங்கல்லில் ஒரு கால்நடை மருத்துவமனை கொண்டு வந்துள்ளேன். சிவகாசி அரசு மருத்துவமனையை ஹைடெக் மருத்துவமனையாக தரம் உயர்த்தி தீக்காய சிகிச்சை பிரிவை கொண்டு வந்துள்ளேன். மகப்பேறு மருத்துவமனையை கொண்டு வந்துள்ளேன். சிவகாசி பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்துள்ளேன். ஏராளமான பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்தி புதிதாக கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளேன். நான் கொண்டு வந்து திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திமுக ஆட்சியில் எதுவுமே எந்த திட்டங்களும் புதிதாக கொண்டு வரப்படவில்லை. பூலா ஊரணி பள்ளியில் 2 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன், மாரனேரி பள்ளிக்கு 2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளேன். மீனம்பட்டியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன். திருத்தங்கல் சத்யா நகரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளேன். எஸ்.ஆர்.அரசு பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளேன். நான்கு புதிய பள்ளிக்கூடங்களை நான் கொண்டு வந்துள்ளேன். சிவகாசிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன். சிவகாசிக்கு புதிய நீதிமன்ற கட்டிடத்தை கொண்டு வந்துள்ளேன். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
தற்போது திமுக ஆட்சி சரியில்லை. எதோ ஆட்சியை நடத்துகின்றனர். பட்டாசு தொழிலை பாதுகாத்தது அண்ணா திமுக ஆட்சியில்தான். இந்த தொழிலுக்கு எப்போது பிரச்சனை என்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர்கள் அண்ணா திமுகவினர். அதிமுக கொண்டு வந்த காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் இன்று கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். மேட்டூர் அணை வறண்டு கிடக்கின்றது. டெல்டா மாவட்டங்கள் காய்ந்து கிடக்கின்றது. டெக்ஸ்டைல்ஸ் தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். எல்லா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் கரண்ட் பில் கட்டிய நிறுவனம் இன்று 50 லட்சம் ரூபாய் கரண்ட்பில் கட்டி வருகின்றனர். கரண்ட் பில், வீட்டு வரியை கூட்டி விட்டனர். நிலத்தீர்வு வரி. பஸ் கட்டணம் கூட்டிவிட்டனர். இந்த திமுக ஆட்சி ஏழைக்களுக்கு உதவக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் மிட்டா மிராசு தாரர்களுக்கு உதவக்கூடிய ஆட்சியாக இருக்க கூடாது. ஏழை எளிய மக்களை பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அண்ணா திமுகவை வெ்றறிபெற செய்யுங்கள். எடப்பாடியார் கை நீட்டுபவர் பிரதமராக வர வேண்டும். அல்லது அவரே பிரதமராக வரவேண்டும். நான் இதை சொன்ன உடனே சிலர் அதை நக்கல் செய்து கருத்து தெரிவித்துள்ளனர். ஒரே எம்பியாக இருந்த ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர் பிரதமராக வரவில்லையா. கர்நாடக தேவகவுடா பிரதமராக வரவில்லையா. 10 எம்பிகளை வைத்து பிரதமராக வரும்போது 2கோடி உறுப்பினர்களை வைத்திருக்கின்ற அண்ணா திமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஏன் பிரதமராக வர முடியாது. சாதிப்பது என்பது எடப்பாடியாருக்கு சவால். பொதுமக்களுக்கு உழைப்பது அவரது பிறவிக்குணம். அவரது பின்னால் 2கோடி தொண்டர்கள் அணிவகுத்து நிற்போம். இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அண்ணா திமுகவை அமர வைத்தது புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அப்படி பட்ட இய்ககம் அண்ணா திமுக விழ்ந்து விடுமா. அண்ணா திமுக புது எழுச்சியோடு மீண்டும் எழுந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெற்றிபெறுவோம். அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலிலும் வெல்வோம். வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் முத்தரையிட்டு அண்ணா திமுகவை மாபெறும் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே. கே.பாண்டியன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் என்.சி.ஓ காலனி மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் என்.எம்.ரமணா, எம்ஜிஆர் இளைஞர் அணி துணை தலைவர் தினேஷ்பாபு, மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்க பாளையம் காசிராஜன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பழனிமுருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையதுசுல்தான், சிவகாசி மாநகர கவுன்சிலர் கரைமுருகன், பாசறை நிர்மல்குமார், இளைஞரணி மணிகண்டன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் வசந்தகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என் செல்வம், இணைச் செயலாளர் பாலாபாலாஜி, ஒன்றிய மகளிர் அணி இணை செயலாளர் இந்திராணி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கூடலிங்க பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் தர்மர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தொகுதி கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் அமல்ராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருமுருகன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்து மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் மகேஸ்வரி ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு ஒன்றிய கவுன்சிலர் கங்காதேவி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முனியாண்டி பள்ளப்பட்டி கிளைச் செயலாளர் காளிராஜன், இளைஞர் அணி துணைச் செயலாளர் பூபதிராஜாராம், காளியம்மன் நகர் கிளைச்செயலாளர் சங்கிலிமுருகன், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, மாவட்ட அம்மா பேரவை தலைவர் கமல்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகேசன மாவட்ட மீனவர் அணி இணை செயலாளர் முத்துராஜ் தலைமைக் கழக பேச்சாளர் சின்னத்தம்பி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் முனியசாமி, குருபாண்டியன், மேற்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் மணிமாறன், மேற்கு ஒன்றிய இலக்கிய அணி கருப்பசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மாயாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வல்லவராஜா, துணைச் செயலாளர் அழகர், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவா, இளைஞரணி சங்கரேஸ்வரன், வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கார்த்திக், வடக்கு ஒன்றிய மீனவர் அணி செயலாளர் ஜெயராம், அம்மா பேரவை செல்வக்குமார், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ராஜகோபால், இளைஞர் பாசறை தங்கபாண்டி, மாணவர் அணி பால்ராஜ், அண்ணா தொழிற்சங்கம் ஆட்டோ மூர்த்தி, அம்மா பேரவை அழகர்குமார், இளைஞர் அணி வடபட்டி ராஜா, மேற்கு ஒன்றிய மாணவரணி பிரகாஷ், இரணியன் மற்றும் சிவகாசி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், சிவகாசி தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள், திருத்தங்கல் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள், சிவகாசி கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள், சிவகாசி மேற்கு பகுதி கழக நிர்வாகிகள், சிவகாசி மாநகராட்சி வட்டக் கழகச் செயலாளர்கள், சிவகாசி கிழக்கு ஒன்றிய கிளைக் கழகச் செயலாளர்கள், சிவகாசி மேற்கு ஒன்றிய கிளைச் செயலாளர் மற்றும் ஒன்றிய கழக, பகுதி கழக, வட்டக் கழக, கிளைக் கழக, நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிகுமார், அம்மா பேரவை செந்தில் குமார், புதூர் கிளைக் கழகச் செயலாளர் ராஜாராம்திருப்பதி நன்றி கூறினர். கூட்டம் ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆரோக்கியராஜ் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *