• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

வைகைப் புயலின் அதிரடிஆட்டம் மீண்டும் தொடங்கியது

வைகைப்புயல் நடிகர் வடிவேலு நீண்ட வனவாசத்திற்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

அவர் விரும்பிய நாய் சேகர் தலைப்புக்கு முட்டிமோதி பார்த்துவிட்டு முடியாமல் போனது அதனால் நாய் சேகர் ரிட்டன் எனும் பெயரில் கதைநாயகனாக நடிக்க தொடங்கியுள்ளார் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் மேக்அப் போட்டு காத்திருந்தாராம். அவருடன் நடிக்க வேண்டிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற டாக்டர் படத்தின் மூலம் திடீர் புகழ்பெற்ற காமெடி நடிகர் மிகவும் லேட்டாக வந்தாராம்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நடிகர், மேக்அப்பை கலைத்து விட்டு புயல்போல புறப்பட்டு சென்று விட்டராம். ஆரம்பத்திலேயே இப்படியா என திரையுலகினர் முணுமுணுக்கின்றனர்.