• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது

ByA.Tamilselvan

May 6, 2022

தமிழக முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது.நேற்று முதல் 12ம் வகுப்பு தேர்வு தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று 10ம் வகுப்பு தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதவுள்ளனர்.
பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளது.