தமிழகம்முழுவதும் 12ம் வகுப்பு பொது தேர்வு நேற்று துவங்கி நடைபெற்றுவருகிறது.இன்று 10 வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி மே 30ம் தேதி நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பத்தாம் பொதுத் தேர்வில் 487 பள்ளிகளைச் சார்ந்த 20,653 மாணவர்கள், 19,758 மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி பகுதியில் 1873 பேர் உட்பட மொத்தம் 40,411 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வு 150 மையங்க ளில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இந்தாண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 602 மாற்றுத்திறன் கொண்டோர் எழுதுகின்றனர். இதில் கண்பார்வை, மனவ ளர்ச்சி குன்றிய மற்றும்கை ஊனமுற்ற மாணவ, மாணவியர் 317 பேருக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனித்தேர்வர்கள் 2,149பேர் 8மையங்களில் தேர்வு எழுதுகின்றனர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 9 புதிய தேர்வு மையங்களும் அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப் பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் மையத்திற்கு வந்து செல்ல கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளுக்கு கண்காணிப்பு பணிகளுக்காக 265 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 265 துறை அலுவலர்கள் 125 கூடுதல் துறை அலுவலர்கள், 3,929 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 600 நிலையான பறக்கும்படை, 9 ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வை கண்காணிக்கின்றனர்.