கீர்த்தி சுரேஷ் உடன் சாணிக் காயிதம், விஜய் உடன் பீஸ்ட் என அடுத்தடுத்து வெள்ளித்திரையில் நடிகனாக கால் பதிக்க காத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்! தொடர்ந்து, தனது தம்பி தனுஷுக்கு வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனது 45வது பிறந்தநாளை நேற்று (மார்ச் 5) கொண்டாடிய செல்வராகவனுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பிறந்தநாள் வாழ்த்துடன் பக்காவான நானே வருவேன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் டைட்டிலில் படம் இயக்கி வருகிறார் செல்வராகவன். இதுவரை தனுஷ் இருக்கும் போஸ்டர்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது செம மிரட்டலான லுக்கில் தனுஷ் உடன் உடைந்த ஜன்னல் கண்ணாடிக்கு பின்னாடியில் செல்வராகவனும் இருக்கும் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஷேர் செய்து செல்வராகவனை வாழ்த்திய நிலையில், ரசிகர்கள் இந்த படத்தில் அப்போ தனுசுக்கு வில்லன் செல்வராகவன் தானா? வெறித்தனமாக இருக்கப் போகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதற்கு ஏற்றார்போல இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராகவன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள் என வாழ்த்தி உள்ளார். அவரது ட்வீட்டை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் செல்வராகவனுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.