• Sun. May 5th, 2024

வங்கி பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் குறுஞ்செய்திகள்..!

Byவிஷா

Oct 7, 2023

சமீபகாலமாக வங்கியில் இருந்து பயனாளர்களுக்கு கோடிக்கணக்கில் வங்கி இருப்பு இருப்பதாக வரும் குறுஞ்செய்திகளால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
கோட்டாக் மகிந்திரா வங்கியில் நேற்று தஞ்சாவூர் வங்கி பயனாளர் ஒருவரது வங்கி கணக்கில் 756 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதே போல இன்று சென்னையை சேர்ந்த ஒருவருக்கு 753 கோடிரூபாய் இருப்பு தொகையாக குறுஞ்செய்தி வந்து பயனாளரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்று, சென்னை, தேனாம்பேட்டை பகுதியினை சேர்ந்த மருந்தக ஊழியரான முகமது இத்ரிஸ் என்பவர் கோட்டக் மகேந்திரா வங்கியில் கனக்கு வைத்து உள்ளார். இவரது வங்கி கணக்கில் நேற்று மாலை 753 கோடி ரூபாய் கிரெடிட் (வரவு) வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இந்த செய்தியை இவர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து, வங்கியின் அதிகாரபூர்வ செயலியை ஓபன் செய்து வங்கி கணக்கு இருப்பு தொகை பற்றி அறிய முற்பட்டுள்ளார் . ஆனால், அவரது வங்கி கணக்கு நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது என செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து முகமது இத்ரிஸ் வங்கி கிளையை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் இந்த விவகாரத்தை சரி செய்வதாக கூறியுள்ளனர்.
இதே போல தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கணேசன் என்பவரும் கோட்டக் மகிந்திரா வங்கியின் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலைய கிளையில் கணக்கு வைத்து இருந்துள்ளார். அவரது வங்கி கணக்கு இருப்பு தொகை 756 கோடி ரூபாய் இருப்பதாக நேற்று செய்தி வந்துள்ளது.
நேற்று முன்தினம் கணேசன் தனது நண்பருக்கு பணம் அனுப்ப முயலும் போது அது அவரது வங்கி கணக்கிற்கே திரும்ப வந்துள்ளது. அப்போது தான் அவரது வங்கி கணக்கு இருப்பு தொகை 753 கோடியாக உள்ளது என செய்தி வந்துள்ளது. உடனே அவர் நேற்று வங்கி கிளையை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
இது தலைமை அலுவலகமான மும்பையில் இருந்து தவறுதலாக வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தவறுதலாக குறுஞ்செய்தி வந்துள்ளது என கூறி, பின்னர் , கணேசன் வங்கி கணக்கில் உண்மையான இருப்பு தொகை விவரம் குறுஞ்செய்தியாக வந்துள்ளது.
முன்னதாக தமிழநாடு மெர்கண்டைல் வங்கியில் கணக்கு வைத்திருந்த சென்னையை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. இந்த குளறுபடியை அடுத்து தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமை அதிகாரி ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *