அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி காரில் பயணித்தபோது அவருக்குப் பனிக்குடம் உடைய, அந்த டெஸ்லா எலக்ட்ரிக் ஸ்மார்ட் காரை அவர் கணவர் ஆட்டோபைலட் மோடில் போட்டு தன் மனைவியை கவனித்துக்கொள்ள, காரில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியைச் சேர்ந்த தம்பதி யிரான் செர்ரி மற்றும் கீட்டிங். அண்மையில் தமது மூன்று வயதுக் குழந்தையுடன் டெஸ்லா எலக்ட்ரிக் ஸ்மார்ட் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது கர்ப்பமாக இருந்த யிரான் செர்ரிக்கு, பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் வாகன நெரிசலில் அவர்களது கார் சிக்கியிருந்ததால், மருத்துவமனைக்கு விரைய முடியாத சூழ்நிலை. இந்நிலையில், யிரான் செர்ரியின் கணவர் காரை இயக்குவதை நிறுத்திவிட்டு, அதை ஆட்டோபைலட் மோடில் போட்டு உள்ளார்.
தொடர்ந்து, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த தன் மனைவியை முன்பக்க இருக்கையில் படுக்கவைத்தவர், அவரின் கைகளைப் பிடித்து ஆறுதல் அளித்துள்ளார். மருத்துவமனைக்குச் செல்வதற்கு 20 நிமிடங்கள் இருந்த நிலையில், காரில் நேரத்தையே பார்த்துக் கொண்டிருந்த யிரான் செர்ரி குழந்தையை வெளித்தள்ள வேண்டுமா, அல்லது மருத்துவமனை வரை வெளித்தள்ளாமல் அடக்கிக்கொள்ள வேண்டுமா என்ற குழப்பத்திலும் அவஸ்தையிலும் இருந்ததாக கூறியுள்ளார்.
இறுதியாக `புஷ்’ செய்துள்ளார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே, கார் முன் சீட்டிலேயே தனக்குப் பிரசவம் நிகழ, பெண் குழந்தை பிறந்தது என்று கூறியுள்ளார். மருத்துவமனை சென்ற பின்னர் செவிலியர்கள் வந்து என் குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டினார்” என்று கூறியிருக்கிறார்.டெஸ்லா காரில் பிறந்த குழந்தை என்பதால், மருத்துவமனை
ஊழியர்கள் தங்கள் குழந்தையை டெஸ்லா பேபி என்று அழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர் தம்பதி.