

இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முகமது ஷபி ஷா என்ற டாக்டர், தலீப் லாலி, முசாபர் அகமது மற்றும் முஷ்டாக் அகமது என நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார். இவர்கள் ஹிஜ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாதிகள். இவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட மற்றும் மத்திய அரசுக்கு எதிரான போரில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இதுபற்றிய வழக்கு டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதி பிரவீண் சிங் அளித்த தீர்ப்பில், முகமது ஷபி ஷா மற்றும் முசாபர் அகமது ஆகிய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார். இதேபோன்று, மற்ற இருவர்களான தலீப் லாலி மற்றும் முஷ்டாக் அகமது ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.
