• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பலி..,

ByRadhakrishnan Thangaraj

Dec 30, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் (21) என்பவர் மின்வாரிய துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள மின் கம்பம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணி முடித்து இறங்கும் போது எதிர்பாராத விதமாக அவர் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கை துண்டிக்கப்பட்ட நிலையில் மின் கம்பத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வடக்கு போலீசார் மீட்புக் குழுவினர் மூலம் உடலை மீட்க முயன்றனர். அப்போது இறந்த பணியாளருக்கு உரிய நிவாரணம் கோரியும் மின்சாரத்தை துண்டிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மின் பகிர்மான ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உடலை மீட்க விடாமல் தடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்குறைவிற்காக அனுப்பி வைத்தனர்.