• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரஷ்யா – உக்ரைன் இடையே தற்காலிக போர் நிறுத்தம்

ByA.Tamilselvan

Jan 6, 2023

உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரை நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கி சுமார் ஓராண்டு ஆகும் நிலையில், போர் நிறுத்த அறிவிப்பு வருவது இதுவே முதல்முறை. கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 11 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஓயவில்லை. தொடக்கத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. Also Read – அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் தயார்.. அமித்ஷா தகவல்..! இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் நேட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு கடும் சவால் தந்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் உக்ரைன் மீதானா போர் தாக்குதல் நிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிக்கையில் கூறப்படுகிறது.