விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிற்கு செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் காவலாளிகளாக தேவதானம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 54 )மற்றும் சங்கரபாண்டியன் (வயது 69 )ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த 10 .11 .2025 தேதி அன்று இரவு காவல் பணியில் ஈடுபட்ட பொழுது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்ப்பட்டு கோவில் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டன .

இந்த நிலையில் கொலை குற்றவாளிகளான நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகிய இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகபுத்ரா நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகிய இருவருக்கும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்









