• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேரள மக்களுக்கு ஒணம் வாழ்த்து கூறிய தெலங்கானா ஆளுநர்..!

Byவிஷா

Aug 28, 2023

மலையாள மொழி பேசும் மக்கள் நாளை ஒணம் பண்டிகை கொண்டாடுவதையொட்டி, அவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கடுமையாக உழைக்கக்கூடிய நம் நாட்டு மற்றும் மாநில கலாச்சாரத்தை மிக பெருமையுடன் முன்னிறுத்துகின்ற கேரளத்து சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தேசிய சிந்தனையுடன் அனைத்து மொழி சகோதரர்களும், சகோதரிகளும் ஒன்றாக நம் தேச எண்ணத்தோடு உழைத்து முன்னேறும் போது இந்த நாடு ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெரும். மேலும் உலக அரங்கில் நமது இந்தியாவின் புகழை தலை நிமிரச் செய்த மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நம் இந்திய திருநாடு ஜி-20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்திக்கொண்டிருப்பது நமது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது.
சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி வெற்றி கண்டு வரலாற்று சாதனை படைத்த மகிழ்ச்சியோடு நம் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை கொண்டாடுவோம். 2023 -ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மையையும், பாரம்பரிய உணவுதானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் தருணத்தில் நாமும் அன்றாட உணவில் ஒருவேளை சிறுதானிய உணவுகளை உண்போம். தேச ஒற்றுமையுடன், நேசத்துடன் கேரளத்து சகோதர, சகோதரிகள் அனைத்து செல்வங்களும், இன்பங்களும் பெறவும், ஓணம் பண்டிகையன்று இடும் பூக்கோலத்தை போலவே அவர்கள் வாழ்க்கையும் மலர்ந்திருக்க வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.