நிலவின் மேற்பரப்பில் உள்ள தடைகளைத் தாண்டி, பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகச் செயல்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 திட்ட இயக்குனரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான வீரமுத்துவேல் கூறியதாவது, “நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளம் மேடுகளில் சிக்கிக்கொள்ளாமல் ரோவரை இயக்குவது சவாலான காரியம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 5 மீட்டர் தூரம் வரை பயணிக்க கூடிய இந்த ரோவர் உலவி முதல்முறையாக 100 மி.மீ. ஆழமுள்ள குழியில் வெற்றிகரமாக இறங்கியேறியுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் இதுபோன்ற ஏராளமான தடைகள் இருப்பதால் அவற்றைத் தாண்டி ரோவர் தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ள உதவும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆய்வு இதுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.