• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மது போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்

ByA.Tamilselvan

Jun 13, 2022

மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் மது போதையில் சாலையில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கிய வாலிபர்கள்- சிசிடிவி காட்சி இன்று வெளியீடு.!!
மதுரை மதிச்சியம் காவல் நிலையம் பின்புறம் உள்ள தெற்கு தெரு பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த 2 கார் ஆட்டோ உட்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்களை மதுபோதையில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டு உள்ளது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த ரூபன் குமார்,அரி சுரேஷ்,பிரபு ஆகிய 3 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது