• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருகே வாகன விபத்தில் வாலிபர்கள் பலி

ByKalamegam Viswanathan

Feb 17, 2023

திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் சாலை தடுப்பில் மோதி இருவர் பலி.
மதுரை திருப்பரங்குன்றம் படப் பட்டி தெருவை சேர்ந்த கேசவன் மகன் சரவணன் (வயது 24) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான இதே பகுதியை சேர்ந்த தயாளன் மகன் கெளதம் (வயது 24) என்பவரும் சேர்ந்து நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திருப்பரங்குன்றத்திலிருந்து திருநகர் செல்ல ஜிஎஸ்டி சாலையில் சென்ற போது சாலை தடுப்பு சுவரில் மோதியதில் கௌதம் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். விபத்தில் படுகாயமடைந்த சரவணன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவ்விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.