கோவையில் உள்ள பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏப் இன்ன வேஷன் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து “டெக் ட்ரக் ” எனும் தேசிய அளவிளான மாபெரும் தொடர் தொழில்நுட்ப போட்டி நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ப்ரவீனா அணில், தலைவர் ஏப் இன்ன வேஷன் டெக்னாலஜிஸ் மற்றும் அக்ஷய் தங்கவேல், துணைத் தலைவர் பிபிஜி கல்வி குழுமம் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் நந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் நாடு முழுவதும் பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் விழா அமைப்பாளர் தர்மராஜ், நன்றியுரை வழங்கினார்.