• Mon. Apr 29th, 2024

இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!

ByA.Tamilselvan

Jun 25, 2022

இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” என்று காங்கிரஸ் தலைவர் உறுப்பினர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத்திற்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் ‘அக்னிப் பாதை’ திட்டத்திற்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புக்குப் பிறகும், அந்த திட்டத்தை கை விடும் பேச்சுக்கே இடமில்லை என்று மோடி அரசு பிடிவாத மாக கூறிவிட்டது. அத்துடன், இந்த திட்டத்தின் கீழ், கப்பற் படை, விமானப் படைக்கு ஆளெடுக்கும் நடவடிக்கைக ளையும் உடனடியாக துவங்கி யுள்ளது. அக்னிபாதைத் திட்டத்தின் கீழ் கடற்படை, விமானப்படையில் சேர ஜூன் 24 முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என்று அது அறி வித்துள்ளது.
இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ வேலைக்கு ஒரு ஆள்சேர்ப்பு கூட நடைபெறவில்லை. 2018-19 நிதி யாண்டில் 53 ஆயிரத்து 431 பேர், 2019-20 நிதியாண்டில் 80 ஆயிரத்து 572 பேர் ராணுவத்திற்கு எடுக்கப்பட்டனர். ஆனால், 2020-21 நிதியாண்டிலும், 2021-22 நிதியாண்டிலும் ராணுவத்திற்கு ஒருவர் கூட புதிதாக தேர்வு செய்யப்படவில்லை. இப்போது, 4 ஆண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் அக்னிவீரர் திட்டத்தைக் கொண்டு வந்து நாட்டுக்கு சேவை செய்ய காத்திருந்த இளைஞர்க ளின் கனவுகளை உடைத்து விட்டீர்கள்” என்று மோடி அரசைக் கடுமையாகச் சாடி யுள்ளார். “இந்த இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் மோடியின் கர்வத்தை உடைக் கும்” என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *