• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தேனியில் மூடப்படும் டீக்கடைகள், நேரம் குறைக்கப்படும் உணவகங்கள்..,

BySubeshchandrabose

Mar 10, 2026

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிவாயு சிலிண்டர் நிறுவனம் மூடப்பட்டுள்ளது போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு சிலிண்டர்
தட்டுப்பாட்டு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் விநியோக வீட்டின் இல்லத்தரசிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளில் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டு காரணமாக கடைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காததால் தேனியில் டீக்கடைகள் செயல்படும் நேரங்கள் குறைக்கப்பட்டும், ஒரு சில கடைகள் முழுவதுமாக மூடப்படும் வருகிறது.

இது குறித்து தனியார் உணவு உரிமையாளர் கூறுகையில், இந்த மாத தொடக்கத்திலிருந்து வணிக ரீதியான சிலிண்டரின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு தான் வந்தது. தற்போது சிலிண்டர் புக் செய்தால் இல்லை என்றுதான் பதில் வருகிறது மேலும் சிலிண்டர் கிடைக்க இன்னும் பத்து முதல் 15 நாள் வரை ஆகும் என தெரிவிக்கிறார்கள்.

இதனால் ஹோட்டலில் உள்ள டீக்கடைகளை நடத்த முடியாமல் தற்போது மூடப்பட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

சிலிண்டர் இல்லாததால் சைவ உணவகங்கள் காலை நேரத்தில் மட்டும் திறக்கப்பட்டு இரவு நேரத்தில் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அசைவ உணவுகள் தயாரிப்பதற்காக விறகு வைத்து சமைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கூடுதலாக சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2500 ரூபாய் வரை கேட்கிறார்கள் அந்த விலைக்கு வாங்கினால் எங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும் என்பதால் அதனை வாங்கவில்லை.

எங்கள் உணவகத்தில் 120 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் ஹோட்டல்கள் மூடப்படுவதால் அவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது என தெரியவில்லை இது குறித்து தமிழக சூரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தேனி மாவட்டத்திலுள்ள இந்தியன் கேஸ் பாரத் கேஸ் எச்பி கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆன்லைன் மூலமாக சிலிண்டர் பதிவு செய்தால் நாட் ரீச்சபிள் தொடர்பு வெளியே உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.