• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

68 வருடங்களுக்கு பின் ஏர் இந்தியாவை வாங்கிய டாடா நிறுவனம்!..

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து அரசு உடமைகளை தனியாருக்கு விற்ப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

அந்தவகையில், அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. ஆனால் மத்திய அரசு இதை மறுத்தது.

இந்த நிலையில், 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது. ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.70,000 கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் தொடங்கிய நிலையில், மீண்டும் அது அந்நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.