• Sat. Apr 20th, 2024

உள்ளாட்சித் தேர்தல்-வாக்களிக்கும் நேரம் அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் அதன் விவரங்களை வெளியிட்டுயிருந்தது.

இதனையடுத்து, கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்று அனுமதி வழங்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *