கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு அனைத்து வெள்ளாளர் பிள்ளைமார் மகாசபை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆறுமுகம்பிள்ளை தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து புதிய நீதிய கட்சியின் மாநில செயலாளர் கார்த்திக் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணியின் மதுரை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தலைவர்செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதுரை மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.