• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Sep 22, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் எம் பி எஸ். முருகன் தலைமை தாங்கினார் .நிறுவனத்தலைவர் சங்கிலி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி செய்துதர வலியுறுத்தியும், இங்கு செயல்படும் கிரிஸ்டல் நிறுவனத்தின் மேலாளர் நாகேந்திர குமார் என்பவர் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசுவதையும், இரவு நேரங்களில் பெண்கள் வந்து உட்காரும் போது அவரது செல்போனை வைத்து போட்டோ எடுத்து மிரட்டுவதையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகமும் ,மாவட்ட நிர்வாகமும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.