• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குடிகார நாடாக மாறிவிடுமோ தமிழகம்! ஆர்.பி.உதயகுமார் வேதனை..,

உலகத் தமிழினமே வெட்கிதலை குனியும் வகையில், திமுகஅரசின் தவறான கொள்கையால் தமிழகத்தை குடிகார நாடாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை வேதணையோடு ஆர்.பி.உதயகுமார் தெரியப்படுத்துகிறார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,

காலையில் கண்விழித்தால் 7 மணிக்கே மது அருந்தலாம் என்ற நிலையை உருவாக்கி வருவது இன்றைக்கு விவாதமாக உள்ளது. காலையில் எழுந்தால் பத்திரிகை படிப்பதும், காபி அருந்துவது தான் நடைமுறையில் உள்ளது.

 ஆனால் ஆனால் திமுக திராவிட மாடல் அரசு காலையில் எழுந்தவுடன் மது அருந்தும் நிலையை  வந்துவிடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் முத்துசாமி அமைப்புசாரா தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் இவர்கள் மீது பழியைப் போட்டு குடிப்பழக்கம் உள்ளவர்கள் போல தோற்றதை ஏற்பட்டது போல ஒரு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை விட்டுள்ளார் 

நீதிமன்றமோ, மது அருந்துவது சமூகத் தீங்கு இதை அறவே ஒழிக்க வேண்டும் மது அருந்துவதால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதனால் இளைஞர்கள் வாழ்வில் கேள்விக்குறியாக உள்ளது எனக் கூறியுள்ளது.

 மதுவால் தீங்கு குறித்து எந்த விழிப்புணர்வும் செய்யவில்லை ஆனால் டாஸ்மார்க் நேரத்தை கூட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர் அதுமட்டுமல்லாது இன்றைக்கு தக்காளி, மிளகாய், இஞ்சி உள்ளிட்ட காய்கள் விலை ஏறிவிட்டது இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கவில்லை 

விலைவாசி குறித்து எந்த நடவடிக்கை எடுக்காதஒரு கையாளதாக அரசாக உள்ளது முதலமைச்சர் போர்க்கால எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்ல 

கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வை அம்மா அரசு கட்டுக்குள் வைத்திருந்தது கொரோனா கால கட்டங்களில் கூட எடப்பாடியார் விலைவாசி உயர்வை ஏற்றாமல் கட்டுக்குள் வைத்திருந்தார்.

 ஆனால் தற்போது சாதாரண நிலையில் கூட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை மது நேரத்தை அதிகரிக்க தொழிலாளர் மீது பணிவு சுமத்துவது வேதனையாக உள்ளது

 இது நீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும் தமிழர்களின் பண்பாட்டை, பாரம்பரியத்தை உலகத் தமிழர்கள் எடுத்துரைத்து வருகிறனர் ஆனால் உலகத் தமிழர்களே மனம் வேதனை படும் வகையில் தமிழகம் குடிகார நாடாக மாறிவிடுமோ என்று கவலை அடைந்து வருகின்றனர் என கூறினார்.